
6 ஆண்டுகளுக்கு முன்பு , சாகும் வரை ஆடவர் ஒருவரின் தலையை மிதித்து கொன்ற குற்றத்திற்காக, 33 வயது எஸ். பாண்டியராஜிக்கு, மலாக்கா உயர் நீதிமன்றம் சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட பாண்டியராஜ் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி Datuk Ahmad Nasfy Yasin அந்த தண்டனையை விதித்தார்.
உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளை ஆராய்ந்ததில், 27 வயதான S. Ammos Devaprraven, விபத்தில் ஏற்பட்ட காயத்தால் இறக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார். பாண்டியராஜும் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் இருவரும் 2016 அக்டோபர் 23-ஆம் தேதி Ammos-ஐக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
