29.6 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

கணபதி – சிவபாலன் மரணம் தொடர்பில் உள்துறை அமைச்சிடம் மகஜர்

🔥 Views : 10
👁 Reading Now : 49

காவல் கைதி கணபதி மற்றும் சிவபாலன் மரணம் தொடர்பில் புலன் விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சிடம் இன்று மகஜர் வழங்கப்பட்டது.
புத்ராஜெயாவிலுள்ள உள்துறை அமைச்சிடம் இந்த மகஜரை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ், டெம்பளர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சாரி, கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் அரச சார்பற்ற இயக்க தலைவர்களும் இந்த மகஜரை வழங்கினர். தடுப்புக்காவலில் மரணமடையும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

இது தொடர்பில் உள்துறை அமைச்சு வெளிப்படையான விசாரணை மேற்கொண்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தங்களது மகஜரில் கேட்டுக்கொண்டுள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles