29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

புதிய இறக்குமதி விளையாட்டாளர்களுக்கு பேரா எப்சி வலை வீச்சு!

🔥 Views : 9
👁 Reading Now : 56

சம்பளம் மற்றும் பொருளாதார பிரச்சனையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் பேரா அணியை விட்டு வெளியேறி வரும் விளையாட்டாளர்களுக்கு பதிலாக பேரா எப்சி புதிய விளையாட்டாளர்களுக்கு வலை வீசியுள்ளது.
அவ்வகையில் பேரா எப்சி லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹுசேன் எல்டோர் மற்றும் இங்கிலாந்தை சார்லி மக்கேல் ஆகியோரின் சேவையை பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் 2019-ஆம் ஆண்டில் ஹுசேன் எல்டோர் பேரா அணியின் மத்திய திடல் தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.
மற்றொரு ஆட்டக்காரரான சார்லி மக்கேல் மத்தியத் திடல் ஆட்டக்காரராவார்.நியூகாஸ்ட்ல் அகாடமியைச் சேர்ந்தவரான இவர்,ஆசியாவில் சிங்கப்பூர் கிளப் மற்றும் கம்போடியா போன்ற அணிகளில் விளையாடி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பேரா அணியில் நிலவி வரும் பொருளாதார சுமை இன்னும் தீர்க்கப்படாமல் இருந்தாலும்,பல விளையாட்டாளர்கள் பேரா எப்சியின் நிலைமையை அறிந்து இன்னும் மாநில அணியிலேயே நிலைத்திருக்க விரும்புவதாகவும் தெரிகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles