
போதைப்பொருள் குற்றத்திற்காக சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயதான சுரேந்திரன் மரணம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி காவல் கைதி கணபதி மரணமுற்றார் பின்னர் மே 20ஆம் தேதி சிவபாலன் மரணம் அடைந்தார். இந்நிலையில் சுரேந்திரன் என்பவர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஜூன் மாதம் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பொக்கா எனப்படும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக குடும்பத்தார் வேதனையுடன் தெரிவித்தனர்.
