
பேரக்கில் உள்ள நீதிமன்றங்களில் சீன, தமிழ்மொழி பெயர்ப்பாளர்களை அரசு நியமிக்காது என்று அறிவித்துள்ளதை அடுத்து, அதிகமான மொழிப் பெயர்ப்பாளர்களை அரசு நியமிக்க வேண்மென மூத்த வழக்கறிஞரான எஸ் வி நமசு கேட்டுக் கொண்டார்.
நீதிமன்றங்களை மிகுந்த பொருட்செலவில் புதுப்பிப்பதோடு நீதி வழங்க குற்றவாளிகளுக்கு மொழிபெயர்பாளர்கள் உட்பட பல வசதிகளையும் செய்து கொடுப்பதே அரசின் கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.
மொழிப் பெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகக் குறைவாக இருப்பதால், அதனை யாரும் விரும்பவில்லை என்றும், பலர் அத்தொழிலை விட்டு விலகியும் உள்ளனர்.
வழக்கை நடத்துவோர் தனியார் மொழிபெயர்பாளர்களை நியமிக்க நாளொன்றுக்கு 500லிருந்து 1,000 ரிங்கிட் வரை செலவிட வேண்டியுள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் வாதங்களை முறையாக எடுத்து வைக்க மொழிப் பெயர்ப்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென நமசு கேட்டுக் கொண்டார்.
