
அம்னோவின் சட்டத் திருத்தப் பரிந்துரையின் முடிவு இம்மாதம் 16ஆம் தேதி தெரியும் என்று சங்கங்களின் பதிவகம்(ஆர்ஓஎஸ்) தெரிவித்துள்ளது.
சட்டத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பொதுத்தேர்தல் முடிந்து 6 மாதத்திற்குப் பின்னர் கட்சியின் தேர்தலை நடத்த முடியும்.
சட்டத் திருத்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், கட்சியில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்படும் என்று துணைத் தலைவர் Muhammad Hasan எச்சரித்தார்.
2021-2023ஆம் தவணைக்கான தேர்தல் கடந்தாண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் நடந்திருக்க வேண்டும். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டு, இவ்வாண்டு டிசம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
