28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சபா, கெனிங்காவ் தேவாலயம் சேதப்படுத்தப்பட்டது

🔥 Views : 6
👁 Reading Now : 63

சபா,கெனிங்காவில் உள்ள புனித செயிண்ட் சேவியர் தேவாலயம் சமூக விரோதி ஒருவரால் நேற்று சேதப்படுத்தப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று காலை 7.30 மணிக்கு வழிபாடு முடிவடைந்த பின்னர், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேவாலயத்தில் புகுந்து, அங்கிருந்த மேரி மாதாவின் சிலையையும் சிலுவையையும் உடைத்துச் சேதம் விளைவித்துவிட்டு, தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
தப்பிச் சென்ற நபர் இறுதியில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடக்கக்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநிலை குன்றியவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சம்பந்தமாக பொதுமக்கள் ஆரூடங்களைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென கெனிங்காவ் போலீஸ் தலைவர் நோர் ரஃபிடா கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles