28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

வெளி மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் சுலபமாக வாக்களிக்க உதவ வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 24

வெளி மாநிலங்களில் வேலை காரணமாக வசித்துவரும் மலேசியர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுந்த ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டுமென விஸ்டம் அறக்கட்டளையின் செயல்முறை அதிகாரி Lisa Fauzi (லிஸா ஃபவுசி) கேட்டுக் கொண்டுள்ளார்.
சபா, சரவாக்கைச் சேர்ந்த 5 லட்சம் பேர் தீபகற்ப மலேசியாவில் வேலை செய்து வருவதாகவும் அவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல அதிக செலவாகும் என்பதால், அதில் குறைந்தது 95 விழுக்காட்டினர் செல்ல முடியாத நிலையில் இருப்பர்.
ஜொகூர் தேர்தலில், சிங்கப்பூரில் வேலை செய்து அங்கேயே தங்கி இருக்கும் மலேசியர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்ததுபோல், கிழக்கு மலேசியர்களுக்கும் அம்மாதிரியான வாய்ப்பை வழங்க வேண்டுமென லிஸா ஃபவுசி கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles