28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

முப்படை வீரர்களின் புதிய கட்சியை அங்கீகரிக்காததை எதிர்த்து வழக்கு

🔥 Views : 6
👁 Reading Now : 52

முப்படைகளின் முன்னாள் வீரர்கள் தங்களின் புதிய கட்சியின் அங்கீகாரத்தைத் தர தாமதித்து வரும் சங்கங்களின் பதிவகத்தின் மீது வழக்கு தொடுக்க நீதிமன்றத்தில் அனுமதியைக் கோரியிருக்கின்றனர்.
பார்டி கெமாக்முரான் எனும் அக்கட்சியின் பதிவுக்கான விண்ணப்பம் 2021 மார்ச் 9ஆம் தேதி அனுப்பப்பட்டது. மார்ச் 16ஆம் தேதி அதனைத் தள்ளுபடி செய்வதாக ஆர்ஓஎஸ் தெரிவித்துள்ளது.
எனினும், அதனை எதிர்த்து மேல் முறையீடு மார்ச் 25ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்ஓஎஸ் அதற்கான பதிலை 7 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென்றும், தவறினால் நீதிமன்ற வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பத்தை தாமதப்படுத்த தகுந்த காரணம் இல்லை. சட்டத்துக்கு முரணானது, அரசமைப்பு விதிகளுக்கு எதிரானது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles