
அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என்று ஏமாற்றப்பட்டு கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலேசியர்கள் நால்வர் காப்பாற்றப்பட்டு நாடு திரும்பினர்.
ஆசை வார்த்தை கூறப்பட்டு ஏமாற்றப்பட்ட 54 பேரில் இந்த நால்வரும் அடங்குவர்.
அங்கு இன்னும் 5 பேர் இருப்பதாகவும் குடிநுழைவு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் அவர்கள் நாடு திரும்புவர்.
அங்கு அதிக சம்பளத்தில் வேலை தரப்படும் என்று அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, பிணைப்பணம் கோரப்படுவதாக புக்கிட் அமான் கிரிமினல் புலனாய்வு இயக்குநர் Hussein Omar Khan (ஹுசேய்ன் ஒமார் கான் தெரிவித்தார்.
