
பாலிங்கில் பாதிக்கப்பட்ட கெடா, கம்போங் ஈபோய் குடிமக்கள், வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் டுரியான் தோட்டத் திட்டத்தை கெடா ராஜா மூடா Tengku Sarafudin Badlishah Sultan Sallelhuddin, (தெங்கு சாராஃபுடின் படில்ஷா சுல்தான் சாலேஹுடின்) நிறுத்த உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
மூசாங் கிங் பழத் தோட்டத்தால் 13 கிராமங்கள் அழிந்து 3 பேர் மரணமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய ராஜா மூடா, வெள்ளப் பாதிப்புக்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதோடு மாநில அரசு அவர்களுக்கு உதவிகளை வழங்கும் என்றும் குனோங் இனாய் மலை அடிவாரத்தில் குடியிருப்போர் வேறிடங்களுக்கு மாறிச் செல்ல கேட்டுக் கொண்டார்.
ஆறுகளூக்கு அருகிலும் மலைகளிலும் குடியிருப்போர் மழை காலங்களில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
