
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் நியாயமானதாக இல்லை என்பதால் அதனை மாற்றியமைக்க வேண்டுமென 25க்கு அதிகமான முன்னாள் நீதிபதிகள் அரசின் மீது வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் முன்னாள் நீதிபதிகள்.
தங்களுக்கு 2 விழுக்காட்டுக்கும் அதிகமான ஓய்வுதிய அதிகரிப்பும், கூடுதலான அனுகூலங்களையும் அவர்கள் கோரியுள்ளனர்.
அதற்கு ஏதுவான பரிந்துரை ஒன்றை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக அதில் கையெழுத்திட்ட முன்னாள் நீதிபதிகள் டான்ஸ்ரீ அலாவுடின் முகமட் ஷெரிப், டான்ஸ்ரீ சித்தி நோர்மா யாக்கோப், டான்ஸ்ரீ ஹைதர் முகமட் நோர், டான்ஸ்ரீ அரிஃப் மாட் யூசோப் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கானது ஆகஸ்டு 16ஆம் தேதி முதல் வாசிப்புக்கு வருமென்று அறிவிக்கப்பட்டது.
