28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பிகேஆரின் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் என்னை பேராளர்கள் ஆதரிக்க வேண்டும்

🔥 Views : 9
👁 Reading Now : 46

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பெசாரின் இந்தியர் பிரதிநிதியுமான நான் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கட்சியின் காங்கிரஸ் மாநாட்டில் 2022-2025ஆம் தவணைக்கான மத்திய செயலவைக்குப் போட்டியிடவிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோத்தா ராஜா சட்டமன்ற உறுப்பினரான நான் மக்களுக்கும் கட்சிக்கும் நிறைவான சேவையை வழங்கி பாராட்டுதல்களைப் பெற்றது போல், மத்திய செயலவைப் பதவியைக் கொண்டு மேலும் சிறப்பாக எனது பணியைத் தொடர அப்பதவிக்குப் போட்டியிடுகிறேன்.
அப்பதவியின் துணையோடு கட்சியை வலுப்படுத்தி, கட்சி துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் கரங்களை வலுவாக்கி, அதிகப் பெரும்பான்மையில் ஆட்சியைப் கைப்பற்றி, பிரதமர் பதவியை அடைய என்னாலான தன்னலமற்ற சேவையைச் செய்ய உறுதி பூண்டிருக்கிறேன்.
பேராளர்கள் எனது மக்கள் சேவையை மனதில் இருத்தி, வற்றாத ஆதரவை நல்கி, ஆதரவளிக்க வேண்டிக் கொள்கிறேன்.

'உங்களின் வாழ்வு வளம் பெற   என்றென்றும் உழைக்கத் தயாராகக் காத்திருக்கும் மக்களின் சேவகன் குணராஜ் ஜோர்ஜ்'

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles