
கட்டுமானத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக் குறையை நிவர்த்திக்க ஆவணமற்ற அந்நியர்களைச் சட்டபூர்வமாக்கி அங்கீகரிக்க வேண்டும் என மலேசிய பூமிபுத்ரா குத்தகையாளர் கழகத்தின் தலைமைச் செயலாளர் ஸஹரானி யூசோப் ஒமார் கேட்டுக்கொண்டார்.
அவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதை விட்டொழிக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்தோனேஷிய தொழிலாளர்களை இங்கு அனுப்புவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கட்டுமானத் துறையில் ஆள் பற்றாக்குறை மேலும் கடுமையாகி உள்ளதாகத் தெரிவித்தார். .
இந்நிலையில் மற்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களைத் தருவிக்கும் அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என்றும் இங்குள்ள ஆவணமற்ற அந்நியர்களை அங்கீகரித்து அவர்களுக்கு வேலை கொடுத்தால், அவர்களின் மூலம் பெறும் லெவி, வேலை பெர்மிட் கட்டணங்கள் பொருளாதாரத்திற்கு ஊக்கம் ஊட்டுவதாக அமையயும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது கட்டுமானத் துறையில் 5 லட்சம் காலியிடங்கள் இருப்பதால் அவற்றை விரைவாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
