
கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துத் தொகுதிகளிலும் பிகார் மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது.
மேலும், வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் பிகேஆர் போட்டியிடுவதற்கு தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அதன் தலைமைச் செயலாளர்
சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
கூடுதல் தொகுதிகளில் பிகேஆர் வெற்றிபெற்றால் அது கட்சிக்கு மேலும் வலுவைச் சேர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.
