30 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

இலங்கையில் கதி மலேசியாவுக்கு வராது

🔥 Views : 13
👁 Reading Now : 56

இலங்கை தற்போது அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடியைப் போன்று மலேசியாவும் எதிர்நோக்க வேண்டிவரும் என்று கூறப்படுவதை பிரதமர் நஜீப் ரசாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது ஒரு அரசியல் தந்திரம் என்றும் மக்களை ஏமாற்றுவதற்கு பயமுறுத்துவதற்கும் தூண்டி விடுவதற்கு இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் வெளிநாட்டு நாணய கடனை அடைப்பதற்கும் இலங்கைக்குப் போதுமான அந்நிய கையிருப்பு இல்லாத காரணத்தினால் அதன் கடன் தொகை 5100 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. தற்போது அதன் கையிருப்பு 240 கோடி டாலர் மட்டுமே ஆகும்.
ஆனால், அதனோடு மலேசியாவை ஒப்பிடுகையில், மலேசியாவின்அந்நியக் கடன் 6,600 கோடி என்றும் அதன் வெளிநாட்டு நாணய கையிருப்பு 11,600 கோடி டாலராக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியா சுற்றுலாத் துறையை மாட்டுமே நம்பியிராமல், தொழில்களை பல்வகைப்படுத்தி, இயற்கை வளங்களைப் பேணிக் காத்து அதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறுகிறது.
இலங்கையிடம் இருந்து மலேசியா படிப்பினையை கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் தோல்வியுற்ற நாடாக அது மாறக்கூடும் என்று ரேகாவின் மூத்த தலைவர் லிமிட்ஸ் நேற்றுமுன்தினம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles