31 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

அனைத்து சொத்துக்களையும் நன்கொடையாக வழங்க திட்டமிட்ட பில் கேட்ஸ் – குவியும் பாராட்டு

🔥 Views : 14
👁 Reading Now : 29

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசோஃ நிறுவனருமான பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இதற்காக இவர் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார்.
இந்த அறக்கட்டளையில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பில் கேட்ஸ் இந்த மாதம் 2,000 கோடி அமெரிக்க டாலரை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார்.
நான் இந்தப் பணத்தைக் கொடுப்பதை தியாகமாக நினைக்கவில்லை. மிக பெரிய சவால்களைச் சமாளிப்பதில் நான் ஈடுபட்டிருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன். மேலும் எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பில் கேட்ஸ் அவர்களின் இந்த மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles