31.7 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

அரசின் செலவைக் குறைக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகள்

🔥 Views : 12
👁 Reading Now : 20

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் வேளையில், அரசின் செலவினத்தை 5 விழுக்காடு வரை குறைக்க கருவூலத்தின் தலைமைச் செயலாளர் அஸ்ரி ஹமிடோன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் படி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அலுவல் காரணமாக வெளிநாடு செல்லும்போது, துறை சார்ந்த இரு அதிகாரிகள் மட்டுமே உடன் செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்கள், துணைத் தலைமைச் செயலாளர்கள், இலாகா மற்றும் ஏஜென்சிகளின் தலைவர்கள் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே வெளிநாடு செல்ல முடியும் என்றும் அவர்கள் மலிவு விலை விமானக் கட்டணத்திலும் மலிவு விலை கட்டண ஹோட்டல்களிலும் தங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், பிரதமரும் அமைச்சர்களும் எத்தனை முறை வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்பது வரையறுக்கப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles