29.9 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

என்னை ஆதரிக்கும் ரபிஸி ரம்லி சில சமயங்களில் குத்தலாகப் பேசுவதும் உண்டு

🔥 Views : 18
👁 Reading Now : 64

கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ரபிஸி ரம்லி சில சமயங்களில் தலைவர்களைக் குத்திப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
அவரைத் தமக்கு நன்கு தெரியும் என்றும் பல சமயங்களில் அவர் தலைவர்களைப் பற்றி கடுமையாக விமர்சித்து வீணான பிரச்சினைகளை எழுப்புவதில் வல்லவராகத் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரின் பேச்சு கட்சியின் பிளவை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தமக்கு துணைத் தலைவராக இருக்கும் வரை, பல முக்கிய பொறுப்புகளை ஏற்று மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால்,ல் அவர் சிறிது அடக்கி வாசிக்க வேண்டும்.
பிகேஆரின் காங்கிரஸ் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரபிஸி, கருத்துக் கணிப்பில் அன்வாரின் செல்வாக்கு சரிந்து வருவதால், அன்வார் பதவியை விட்டு விலக வேண்டுமென சூசகமாகக் குறிப்பிட்டது அன்வாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles