
பினாங்கு மாநிலத்தில் பகடி வதையால் மரணமுற்ற நவீன் கொலை வழக்கு இப்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக பிரவீன் என்ற 22 வயது இளைஞர் விளங்குகிறார்.
இந்த மரணம் தொடர்பில் புதிய தகவல்களை வெளியிட்டால் கொலை செய்யப்போவதாக பிரவீனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் போலீசாரின் ஆலோசனை பேரில் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதாக நவீன் நடவடிக்கை குழு தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.
