
பேரா கிரியான் மாவட்டத்தில் கோவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,இன்று முதல் பாகான் செராய் மற்றும் பாரிட் புந்தார் வட்டாரத்தில் கடுமையான நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அமலாக்கப்பட்டுள்ளது.பேரா மற்றும் பினாங்கு மாநில எல்லைப் பகுதியில்,கம்போங் கெடா,பெர்மாத்தாங் கெலிங் ஆகிய இடங்களில் போலீசாரின் சாலை தடுப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதே போன்று பாகான் செராயில் பல இடங்களில் முள் வேலிகளாலும்,சிமெண்டு தடுப்புகளாலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.14 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த கடுமையான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை காலத்தில்,பொதுமக்கள் எம்சிஓ விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.