
பினாங்கு மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் வாழும் பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கூறினார்.
பள்ளியை கட்டுவதற்கான நிலத்தை மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பள்ளியை கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் அதற்கான உரிமத்தை வழங்க வேண்டும்.
இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி இல்லாத காரணத்தால் இந்தியர்கள் தங்களது பிள்ளைகள்,வேறு பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் ஒத்துழைப்போடும், மாநில அரசாங்கத்தின் ஆதரவோடும் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் நிச்சயம் ஒரு தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்படும் என்று சத்தீஸ் முனியாண்டி நம்பிக்கை தெரிவித்தார்
தற்போதைய பினாங்கு மாநிலத்தில் 28 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன மேலும் ஒரு பள்ளியை கட்ட வேண்டும் என்பதை எங்களின் விருப்பம் ஆகும் என்று சத்தீஷ் முனியாண்டி குறிப்பிட்டார்.