
தடுப்புக்காவலில் மரணமடையும் சம்பவங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கேள்வி எழுப்பினார்.
ஒரே மாதத்தில் மூன்று இந்தியர்கள் தடுப்புக்காவலில் இறந்துள்ளனர் .
இப்போது சுரேந்திரன் என்ற இளைஞரின் மரணம் மர்மத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வயிற்று வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்து இவர் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
இவளின் உடல் உறுப்புகள் செயல் இழந்த மர்மம் என்ன? இதற்கு யார் பொறுப்பு என்று அவர் கேள்வி எழுப்பினார்
சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயதான சுரேந்திரன் நேற்று மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன் பின்னர் பொக்கா எனப்படும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.