30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நஜிப் ரசாக்கின் மோசமான நிர்வாகத்தை எதிர்த்து போலீஸ் புகார்

🔥 Views : 5
👁 Reading Now : 51

மலேசிய குடிமகனாகவும் கோத்தா ராஜா கெ அடிலான் தலைவராகவும் இருக்கும் குணராஜா ஜோர்ஜ் எனும் நான். நாட்டின் 6ஆவது பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் கவனயீனமான, பொறுப்பற்ற நடவடிக்கையினால் சூலு சுல்தான் வாரிசுகளுக்குச் செலுத்த வேண்டிய ஆண்டுக் கட்டணமாக 750 கோடி ரிங்கிட் கடனை ஏற்படுத்தி இருப்பதால், அவர் மீது போலீஸ் புகாரை செய்ய விரும்புகிறேன்.
சூலு சுல்தான் வாரிசுகளுக்குச் செலுத்த வேண்டிய ஆண்டுக் கட்டணத்தை 2013ஆம் ஆண்டிலிருந்து மலேசியா நிறுத்திக் கொண்ட பின்னர், அது நம்பந்தமாக மேற்கொண்டும் சட்ட நடவடிக்கையை எடுக்கத் தவறியதால், பெருந் தொகையை சுல்தானின் வாரிசுகளுக்குச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
கட்டணத்தை நிறுத்திய பின்னர், சூலு சுல்தானின் வாரிசுகள் நாட்டின் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அதனை அனைத்துலக ரீதியில் எடுத்துச் சென்றுள்ளனர். சட்ட நடவடிக்கை சம்பந்தமாக அவர்கள் 2017 நவம்பர் 2ஆம் தேதி நஜிப் ரசாக்கிற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளனர்.
மலேசிய குடிமகன் எனும் பார்வையில் நஜிப் ரசாக்கின் மோசமான நிர்வாக நடவடிக்கையினால் அரசுக்குப் பெருத்த அவமானமும் நட்டமும் ஏற்பட்டுள்ளதால், அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 574, பொதுச் சேவைத் துறை விதிமுறை 132, 1993ஆம் ஆண்டு அரசு ஊழியர் கட்டொழுங்கு நடவடிக்கை, மற்றும் அரசமைப்பு விதி பிரிவு 395 ஆகியவற்றின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இந்தப் புகாரை அடுத்து நஜிப் மீது விசாரணை நடத்த கோப்புகள் திறக்கப்பட்டு அரசு ஊழியர் தமது சேவைக் காலத்தின்போது, பொறுப்போடும், அரசுக்கு நட்டம் ஏற்படாத வகையிலும், நாட்டுக்கு சிறுமை ஏற்படாத வகையிலும் கடமையை செவ்வனே ஆற்ற வேண்டியுள்ளதை வலியுறுத்த விரும்புகிறேன்.
பொறுப்புள்ள மலேசியாவின் குடிமகன் எனும் வகையில் இந்தப் புகாரை அளிக்கிறேன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles