
நாட்டின் பொதுச் சேவைத் துறையின் அடைவு நிலையை அதிகரிக்க அரசின் வேலை வாய்ப்புகளில் எல்லா இனங்களுக்கும் சரி சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென திரேசா கோக் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் அளித்த புள்ளி விவரத்தின்படி பொதுச் சேவைத் துறையில் பூமிபுத்ராக்களுக்கு 90 விழுக்காடு வழங்கப்பட்டு சீன, இந்தியர்களுக்கு வெறும் 10 விழுக்காடு என்பது கெலுவார்கா மலேசியாவை பிரதிபலிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அரசுத் துறையில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கு ஆசிரியர் தொழில், களப் பணியாளர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசு வேலைகளில் கோட்டா முறை அனுசரிக்கப்படுவதில்லை என்று கூறப்படுவது பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும் என்றும் அது நம்ப முடியாத கூற்று என்றும் திரேசா கோக் தெரிவித்தார்.
