33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சபா முதலமைச்சரின் மாத வருமானம் ஒரு லட்சமா?

🔥 Views : 5
👁 Reading Now : 51

கோவிட் பெருந்தொற்றினாலும் பண வீக்கத்தாலும் மக்கள் பெரும் அவதியை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, சபா சட்டமன்ற உறுப்பினர்களின் மாத வருமானம் பன்மடங்காக உயர்த்துவதுன் நோக்கம்தான் என்னவென வாரிசான் இளைஞர் பிரிவுத் தலைவர் அஸிஸ் ஜம்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில சட்டமன்ற உறுப்பின்ரகளின் சம்பளம் அதிகரிக்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு முதலமைசர் Hajiji Noor (ஹஜிஜி நூரி) ன் மாத வருமானம் ஒரு லட்சத்தை எட்டுவதாகவும் அதைத் தவிர அவர் யயசான் சபாவின் தலைவராகவும் சபா எண்ணெய் எரிவாயு மேம்பாட்டு கார்ப்பரேஷன் தலைவராகவும் உள்ளதால் அவர் இன்னும் கூடுதல் வருமானத்தைப் பெறுகிறார்.
அவருக்கும் மாநில அமைச்சர்களுக்கு தண்ணீர், மின்சாரம், காரோட்டுநர், அரசு கார் போன்றவை இலவசமாகத் தரப்படுகிறது.
மேலும், சபா சட்டமன்ற சபாநாயகர் எந்தத் தொகுதியையும் பிரநிதிக்காமல் இல்லாத நிலையில் அவரின் சம்பளம் 5,000 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
மாநிலை அமைச்சர்கள் சம்பளமாக 29,8000 ரிங்கிட்டும் துணையமைச்சர்களின் சம்பள17,700 ரிங்கிட்டாகவும் சபாநாயகரின் சம்பளம் 22,000 ரிங்கிட்டாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் உணவிற்கே அல்லாடும்போது முதலமைச்சருக்கும் மாநில அமைச்சர்களும் சம்பளம் உயர்த்தப்பட்டுவது நியாயமில்லை என்று ஜம்மான் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles