33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சபா சட்டமன்றம் சபாவின் உரிமை பற்றி விவாதிக்க வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 24

சபா சட்டமன்றத்திற்கு முன்னர் 60 பேர் அடங்கிய Solidariti Anak Sabah group (சோலிடேரிட்டின் அனாக் சபா) எனும் அணியினர் சூசு சுல்தான் சபாவைக் கோரும் விவகாரதத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது. .
அது சம்பந்தமான மகஜரை அவர்கள் தரச் சென்றபோது அதனை யாரும் பெறுவதற்குத் தயாராக இல்லை.
இதற்கு முன்னர், சபா சட்டமன்றத்தில் வாரிசான் தலைவர் Shafie Apdal’s (ஷாபி அப்டாலின்) அதே கோரிக்கையை ஏற்க அது மறுத்துவிட்டது.
அதேபோன்று, நாடாளுமன்றத்திலும் அந்த விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் Azhar Harun (அஸார் ஹருண்) அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சபா விவகாரமானது அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளதோடு அதன் பாதுகாப்பும் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்திற்கு முக்கியம் செலுத்தி அதனை சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அந்த அணியினர் கேட்டுக் கொண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles