33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

யாரின் தலையீடும் இன்றி எம்ஏசிசி சுதந்திரமாகச் செயல்படுகிறது – அஸாம் பாக்கி விளக்கம்

🔥 Views : 6
👁 Reading Now : 47

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் எல்லாவிதமான புகார்களுக்கும் ஊழல் தடுப்பு ஆணையம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அதன் ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
தமது அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு பல புகார்களைப் பெறுவதாகவும் அவற்றிற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருந்தால் தங்களின் கடமையை ஆற்ற முடியாமல் போகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆதார அடிப்படையில் எம்ஏசிசி தனது விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், பிரபலங்களின் வழக்குகளில் அரசியல் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுவது அபத்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றுகூட மாரா துணை நிறுவனம் ஒன்றின் இரு மேல்மட்ட அதிகாரிகள் பண முறைகேடு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles