
பாலிங்கில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து பட்டர்வொர்த்தில் இருக்கும் பினாங்கின் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிலையத்துக்கு வரும் நீர் சேறு கலந்து வருவதால், பினாங்கில் நீர் துண்டிப்பு ஏற்படுமென்று அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் படுத்தப்பட்டன. சுங்கை மூடாவில் கிடைக்கும் நீர் பினாங்கின் 80 விழுக்காட்டை பூர்த்தி செய்து வருகிறது. இதற்கு முன்னர், பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பினாங்கில் 3 நாள்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
