28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

எம்ஐடிஎஃப் இயக்குநருக்கு 85,000 ரிங்கிட் அபராதம்

🔥 Views : 6
👁 Reading Now : 31

எம்ஐடிஎஃப் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநர் எஸ்.எஸ்.விஜயகுமார் அந்த நிறுவனத்தின் பொய்யான பற்றுச் சீட்டைப் பயன்பத்தி ரிம. 75,000ஐ மித்ரா நிதியத்திலிருந்து சட்டவிரோதமாகப் பெற்ற குற்றத்திற்காக அவருக்கு 85,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்ப் பள்ளிகளுக்கு கோவிட் தொற்றுக்கான கிரிமி நாசினியை எம்ஐடி எஃப் நிறுவனம் வழங்கியதாக அவர் அந்தப் பற்றுச்சீட்டை பயன்படுத்தியுள்ளார். அக்குற்றத்தை அவர் 2021 ஜூலை 2ஆம் தேதி புத்ரா ஜெயாவில் உள்ள தேசிய ஒற்றுமை அமைச்சின், மித்ரா அலுவலகத்தில் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுஸானா ஹுசேய்ன் மேற்கண்ட அபராதத்தை விதித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles