
அம்னோ உயர்மட்ட தலைவர்கள் பல அணிகளாக பிளவுபட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அம்னோவில் A,B, C உட்பட பல அணிகள் இருப்பதாக தெரியவருகிறது. ஆனாலும் அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ஹசான் இதனை நிரகாரித்துள்ளார். தாங்கள் வழக்கமாகவே அடிக்கடி சந்தித்து வருவதாகவும் ஆனால் பல தரப்பினருக்கு இது தெரியாது என்றும் அவர் கூறினார். எனினும் முதல் முறையாக எங்கள் சந்திப்பின் புகைப்படத்தை வெளியிடுவது என முடிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில்
இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டுவதற்கு புகைப்படத்தை வெளியிட வேண்டும் என தாம் மற்ற தலைவர்களிடம் ஆலோசனை தெரிவித்ததாக நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது முகமட் ஹசான் கூறினார். முகமட் ஹசான் பதிவேற்றம் செய்த புகைப்படத்தில் அம்னோவின் தலைவர் டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, பிரதமரும் உதவித் தலையவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மேலும் இரண்டு உதவித் தலைவர்களான முகமட் காலிட் நோர்டின், டத்தோஸ்ரீ மாட்ஷீர் காலிட், ஆகியோரும் காணப்பட்டனர்
