31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

ஈராக் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய மக்கள்

🔥 Views : 8
👁 Reading Now : 51

ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களைக் கைப்பற்றி அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக திகழ்ந்தது. எனினும் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது பற்றி கட்சிகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் காரணமாக இழுபறி நீடித்தது. இதற்கிடையே, முகமது அல்-சூடானி புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக உள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இந்த வாரத்தில் தொடர்ந்து 2-வது முறையாக நூற்றுக்கணக்கானோர் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் முஸ்தபா, போராட்டத்தை உடனே கைவிடும்படி கேட்டுக்கொண்டார். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles