
முஸ்லிம் அல்லாதோரின் கலாச்சார நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தலையிட்டு கருத்து சொல்லக் கூடாதென ரவூப் எம்பி (Tengku Zulpuri Shah Raja Puji) தெங்கு சுல்புரி ஷா ராஜா புஜி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசும்போது சமய விவகார அமைச்சர் இட்ரிஸ் அமாட், October Fest (அக்டோபர். ஃபெஸ்ட்) கலாச்சார நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக் கூடாதென்றும் அதில் இஸ்லாத்திற்கு ஒவ்வாத வகையில் மதுபானங்கள் பரிமாறப்படுவதால், அது சமூக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் இடையூறாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார். இஸ்லாம் அல்லாதோரின் வர்த்தக நடவடிக்கைகளை அரசமைப்பு சட்டம் உறுதிப் படுத்தியிருப்பதால், அதனைத் தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் தலையீடு செய்து, கருத்து கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென தெங்கு சுல்புரி கேட்டுக் கொண்டார்.



