
நேற்று காட்டுப் பன்றி ஒன்று சிக் மருத்துவமனை வளாகத்தில் உலவியதோடு ஓர் அலுவலகத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் பாதிப்படையவில்லை. பிற்பகல் 1.50 மணியளவில் அந்தப் பன்றி மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து இரு கண்ணாடிக் கதவுகளை சேதமாக்கியது. அதனைப் பிடிக்க தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்கு முன்னரே, அந்தப் பன்றி அருகிலிருக்கும் காட்டிற்குள் ஓடி மறைந்தது.



