26.4 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

அரசியல் நன்கொடைச் சட்டத்தை பொதுத்தேர்தலுக்கு முன்னர் அமல்படுத்துங்கள்

🔥 Views : 6
👁 Reading Now : 66

அரசியல் நன்கொடையைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை 15ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னர் அமல்படுத்தும்படி பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் Sim dse dsu (சிம் ட்சு ட்சி) வலியுறுத்தியுள்ளார். அண்மையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி தாவலைத் தடுக்கும் சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போலவே, அரசியல் நன்கொடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். நன்கொடைகள் சட்ட முறைப்படி பெறப்படுவதோடு, அதற்கான முறையான கணக்கை வைத்திருக்கவும் அது உதவும் என்று அவர் தெரிவித்தார். அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடியின் வழக்கில் சாட்சியமளித்த சாட்சி ஒருவர், பல அரசியல்வாதி களுக்குக் கோடிக் கணக்கில் நன்கொடை கொடுத்தாகத் தெரிவித்ததை அடுத்து, அரசியல் நன்கொடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற அறைகூவல் விடுக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles