
நாடாளுமன்ற கட்டடத்தைப் பழுது பார்த்து சீரமைக்க 14 ஆண்டுகளாகி விட்டதாகத் தேசிய தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 520 மில்லியன் ரிங்கிட் திட்ட மதிப்பில் 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரமைப்புப் பணிகள் இன்னும் முடிவடையாமல் 2025இல்தான் முடிவடையும் என்று சொல்லப்பட்டது. அதன் தொடக்கக் கட்டத்தில், அத்திட்டத்தின் செலவினம் 520 மில்லியன் என்று கூறப்பட்டாலும், பின்னர் அது 20.4 விழுக்காடு அதிகரித்து, இப்போது 626.10 மில்லியன் என்று சொல்லப் படுகிறது. இத்திட்டம் முறையாகவும் சீராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



