29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பூப்பந்து உலகின் வரலாற்று நாயகன் இங் பூன் பீ மறைவு

🔥 Views : 6
👁 Reading Now : 27

நாட்டின் பூப்பந்து விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்திய Ing Boon Bee (இங் பூன் பீ) நேற்று ஈப்போ மருத்துவமனையில் காலமானார். நேற்று காலையில், காலை உணவை உண்ட பின்னர், அவர் ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரத்தக் குழாய் அடைப்பினால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு மலேசியா தனது முதல் தோமஸ் கப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு காரணமாக இருந்துள்ளார். 1960லிருந்து 1970 ஆம் ஆண்டு வரை அவர் Tan Yee Kan (டான் ஈ கானு) டன் சேர்ந்து பல பூப்பந்து போட்டிகளில் பங்கு கொண்டு வாகை சூடினார். அதன் பின்னர் பஞ்ச் குணாளனுடன் சேர்ந்து இங் பூன் பீ பல போட்டிகளில் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles