28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

நஜிப்பின் மேல் முறையீட்டு வழக்கை ஒத்தி வைக்காவிட்டால், புதிய வழக்கறிஞர்கள் விலகுவர்

🔥 Views : 7
👁 Reading Now : 55

எஸ்ஆர்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நஜிப் செய்து கொண்ட மேல் முறையீட்டு வழக்கு ஆகஸ்டு 15ஆம் தேதியிலிருந்து 10 நாள்களுக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கை நடத்தி வந்த வழக்கறிஞர் ஷாபி முகமட்டை மாற்றி, அவருக்குப் பதிலாக ஸைட் நிறுவனத்தின் Hisham Teh Poh Teik (ஹிஷாம் தே போ தீக்) கை நஜிப் நியமித்தார்.
புதிய வழக்கறிஞர் வழக்கை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வழக்கை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். எனினும், கூட்டரசு நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, திட்டமிட்டபடி வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், வழக்கை ஒத்தி வைக்காவிட்டால், அதனை நடத்துவதிலிருந்து தாம் விலகப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹிஷாம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles