29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

போர்க் கப்பல் சம்பந்தமான விளக்கத்தை ஹிஷாமுடின் மேலவையில் விளக்க வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 38

கடற்படைக்கான 6 போர்க் கப்பல் குத்தகையில் ஊழல் நடந்திருப்பதால் குறிப்பிட்டவாறு 6 கப்பல்களில் எதுவும் அரசிடம் ஒப்படைக்காமல் இருப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தற்காப்பு அமைச்சர் Hishamudin Husein (ஹிஷாமுடின் ஹுசேய்ன்) மேலவையில் விளக்கம் அளிக்க வேண்டுமென அமானாவின் Mohd Sabu (முகமட் சாபு) வும் ஜசெகவின் Liew Chin Tong (லியூ சின் தோங்) கும் கேட்டுக் கொண்டனர்.
6 போர்க் கப்பல்களைக் கட்டி முடிக்க 900 கோடி ரிங்கிட் விலைபேசி அதில், 600 கோடி ரிங்கிட் குத்தகை நிறுவனமான Boustead shipyard (போஸ்டெட் ஷிப்யார்ட்) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கப்பல்களின் வடிவைமைப்பு உறுதி செய்யப்படாமலேயே அந்தப் பணம் தரப்பட்டுள்ளது. அப்பணத்தில் 400 மில்லியன் ரிங்கிட்டானது அந்நிறுவனத்தின் கடனை அடைக்கச் செலுத்தப்பட்டுள்ளது.
ஆக, இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், ஹிஷாமுடின் அதற்கான விளக்கத்தை மேலவை உறுப்பினர்களுக்குக் கட்டாயமாக விளக்க வெண்டுமென மாட் சாபுவும் லியூ சின் தோங்கும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles