29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

இலவச கோவிட்-19 பரிசோதனை தொடருமா,?

🔥 Views : 9
👁 Reading Now : 57

சிலாங்கூர் மாநிலத்தில் இலவச கோவிட்19 மருத்துவ பரிசோதனை தொடர்வதா என்பது குறித்து நாளை திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
நாளை நடைபெறும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும்.

இலவச கோவிட்-19 பரிசோதனைக்கான வழி முறைகளை தொடர்பில் நாம் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளது.
எந்த இடையூறும் நெருக்குதலும் இல்லாத பட்சத்தில் அதனை நாம் தொடர்ந்து நடத்துவோம்.
ஜூன் மாதம் முதல் தேதிக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட அனைத்து பரிசோதனை இயக்கங்களும் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளும் முழுமையாக மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles