30.1 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

கிள்ளான் செட்டி பாடாங் பெயர் மாற்றமா?
சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் முறையிடுவோம்!

வரலாற்று சிறப்புமிக்க கிள்ளான் செட்டி பெயர் மாற்றம் குறித்து சிலாங்கூர் மாநில மந்திரி சாரிடம் முறையிடுவோம் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தனர். இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகத் தலங்களில் ஒன்றாக கிள்ளான் பாடாங் சிட்டி விளங்குகிறது.
இதன் பெயர் மாற்றம் தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் கிள்ளான் நகர கழகத் தலைவரை சந்தித்தோம்.
Dataran Klang என்று பெயர் மாற்றம் செய்யப்படுமானால் பாடாங் செட்டி பெயர் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் முறையிட்டோம். எங்களுடன் இணைந்து மேலும் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பாடாஙீ செட்டி பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தோம்.
இது தொடர்பில் கிள்ளான் நகராண்மைக் கழகத்தை சேர்ந்த 7 இந்திய கவுன்சிலர் களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர் இவர்கள் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
உண்மை எது என்று தெரியாமல் சிலர் அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரரை சந்தித்து நாங்கள் இதுபற்றி பேசுவோம் என்று சார்லஸ் சந்தியாகோ மற்றும் டாக்டர் குணராஜ் தெரிவித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles