25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அரசாங்கத்தின் துரித நடவடிக்கை தேவை!

🔥 Views : 10
👁 Reading Now : 54

கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்துக் கொண்டிருக்கும் தடுப்புக் காவல் மரண சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் துரித நடவடிக்கை தேவை. அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை முற்றாக நிறுத்த முடியுமென கெராக்கான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் கணேசன் கூறினார்.
இந்த ஒரு மாதத்தில் மூன்று இந்தியர்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.தடுப்புக் காவலில் போலீசார் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும் இவர்களுக்கு எப்படி இதுபோன்ற மரணங்கள் ஏற்படுகிறது என்பதை அரசாங்கமும்,உள்துறை அமைச்சும் ஆராய வேண்டும்.
இதற்காக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றார்.சுபிட்சமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.தடுப்புக் காவலிலஇனிமேலும் இதுபோன்ற மரண சம்பவங்கள் நிகழாமலிருப்பதை தேசியக் கூட்டணி உத்தி செய்ய வேண்டுமென பத்து காவான் தொகுதி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டத்தோ பரமேஸ்வரன் கணேசன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles