
15ஆவது பொதுத்தேர்தல் இவ்வாண்டுக்குள் நடத்தப்படாவிட்டால், அம்னோ ஆட்சியைக் கைப்பற்றுவது மிகவும் கடினம் என்று அதன் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் அம்னோவும் கூட்டணிக் கட்சிகளும் மிகவும் வலுவாக இருப்பதால் தேர்தல் இவ்வாண்டில் நடந்தால், தேசிய முன்னணி நிச்சயமாக வெற்றி பெற முடியும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இப்போது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்றியும் ஒத்த கருத்தும் இல்லாமலும் இருப்பதால், தேசிய முன்னணி எளிதாக வெல்ல முடியும் என்று அவர் தெரிவித்தார்.



