தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 30 வயது நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நஜிப் ரசாக்கின் மேல் முறையீட்டு வழக்கை கூட்டரசு நீதிமன்றத்தில் தெங்கு மைமுன் இன்னும் 4 நீதிபதிகளோடு விசாரித்து வருவதை விரும்பாத அந்த நபர், அவருக்கு முகநூலின் வழி கொலை மிரட்டல் விடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.