
நேற்று மாலை ஷா ஆலமில் பெய்த கனத்த மழையின் காரணமாக தாமான் ஸ்ரீமூடாவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமூடா ‘டி’ மண்டலத்தில் மாலை 4 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டு, மழை நின்ற பின்னர் வெள்ளம் படிப்படியாக வடிந்தது.
தீயணைப்பு, மீட்புப் படையினர் எந்தவித அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தனர்.
நீரைத் தடுத்து வைக்க மூடியிருந்த தடுப்புக் கேட் திறந்து விடப்பட்டு, வெள்ளம் வெளியேற வழி வகுக்கப்பட்டது.
இரவு 8.30 மணி வரை யாரும் வீடுகளில் இருந்து வெளியேற்றப் படவில்லை. கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னர், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் அப்பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



