
15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் சமமான வாய்ப்பைப் பெற்றிருப்பதாக மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
உள்ளூர் வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும், மஇகாவுக்கு எந்தத் தொகுதி அளிக்கப்பட்டாலும், அதனை தாராளமாக ஏற்றுக் கொண்டு போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார்.
மஇகாவுக்கு வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் அது போட்டியிட வேண்டுமென்பதே தங்களது நோக்கமென்றும், தேவையின்றி தொகுதியில் நின்று தோற்பதை அது தவிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் மஇ கா 14 நாடாளுமன்ற, 18 சட்டமன்றத் தொகுதிளில் போட்டியிட்டு, இரு நாடாளுமன்ற, 3 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.



