
பெட்டாலிங் ஜெயா, தாமான் ஜெயா எல்ஆர்டி வாகன நிறுத்துமிடக் கட்டணம் திடீரென ரிம. 25 ஆக அதிகரித்ததால் சிலர் தங்களது வேலையை விட்டே விலக நினைக்கின்றனர்.
இதற்கு முன்னர் அங்கு 6 ரிங்கிட்டாக இருந்த கட்டணம் இப்போது ரிம. 25ஆக அதிகரித்தது தாங்க முடியாத ஒன்று என்று பெரும்பாலான காரோட்டிகள் குறைபட்டுக் கொண்டனர்.
இதனைத் தவிர்ப்பதற்காகச் சிலர் அதிகாலையிலேயே புறப்பட்டு, பொது கார் நிறுத்துமிடத்திற்குச் செல்வதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வாழ்க்கைச் செலவினத்தோடு கார் நிறுத்துமிடக் கட்டணமும் அதிகரித்து மேலும் சிரமத்தைத் தருவதால் 3,000 ரிங்கிட் சம்பளம் பெறும் ஒருவர் தமது வேலையை உதறித் தள்ளப் போவதாகத் தெரிவித்தார்.



