33.5 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

தாம் நிரபராதி என்று இஸ்லாமிய முறைப்படி சத்தியம் செய்தார் நஜிப்

🔥 Views : 5
👁 Reading Now : 26

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்ஆர்சி வழக்கில் தாம் குற்றமற்றவர் என்று இஸ்லாமிய முறைப்படி சத்தியம் செய்தார்.
கோலாலம்பூர், கம்போங் பாரு Masjid Jamek (மாஸ்ஜிட் ஜாமேக்கில்) அந்த சத்தியத்தைச் செய்துள்ள அவர் எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் தமது வங்கிக் கணக்கில் எப்படி வந்தது, யார் அதைச் செய்தது என்பது தமக்குத் தெரியாது என்றும் அதனை தாம் யாரிடமும் சொல்லி, கணக்கில் சேர்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
எஸ்ஆர்சியை தமது சுயநலத்திற்காக அமைக்கவில்லை, அது சம்பந்தமாக அமைச்சரவைக் கூட்டம் எதிலும் விவாதிக்கவில்லை, ஓய்வூதிய நிதியில் இருந்து 200 கோடியை அந்நிறுவனத்திற்கு வழங்க நெருக்குதல் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்,
‘ தாம் பொய் சொல்லியிருந்தால் அல்லா தம்மைத் தண்டிக்க வேண்டுமென்றும், தாம் உண்மையைக் கூறியிருந்தால், தமது அரசியல் எதிரிகளைத் அவர் தண்டிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles