
மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது.
இதனைத் தீர்க்க அரசமைப்பு விதியை மாற்றுவதே சரியான தீர்வாக இருக்க முடியும் என்று சட்டத் துறைத் தலைவர் Udrus Harun (இட்ருஸ் ஹருண்) குறிப்பிட்டார்.
அதனை அரசுதான் செய்ய வேண்டுமே தவிர தாமல்லவென்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகள் தானியங்க முறையில் குடியுரிமை பெற முடியாவிட்டாலும், அவர்கள் குடியுரிமைக்காகப் பதிவு செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்
அவர்கள் குடியுரிமை பெறத் தகுதியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தும், அண்மையில் மேல் முறையீட்டு நீதிமன்றம் அத்தீர்ப்பிணை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



