
நேற்று முன்தினம் தலைநகரில் கூடிய அம்னோவின் அவசரப் பொதுக்கூட்டத்தில் எஸ்ஆர்சி வழக்கிலிருந்து நஜிப் ரசாக்கை விடுவிக்க பிரதமரின் தலையீட்டைக் கோரியதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
அந்தக் கூட்டம் காலை 11.30 மணிக்குத் தொடங்கி 4 மணி நேரம் நடத்ததாகவும் அதில் பிரதமருக்கு நெருக்குதல் எதுவும் தரப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் 15ஆவது பொதுத்தேர்தல் பற்றியே பேசப்பட்டதாகத் தெரிவித்த அவர், ஆஸ்ட்ரோ அவானி செய்தியைத் தரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



